இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதத் தலைவன் மசூத் அசாரை கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளான்.
பாரீசில் இருக்கும் நிதிக் கண்காணிப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு கடுமை காட்டிவரும் நிலையில் தீவிவாதத் தலைவர்களை நிதி திரட்டிய புகாரில் கைது செய்து வருகிறது பாகிஸ்தான். இது வழக்கமான கண்துடைப்பு நாடகம் என்று இந்தியா நிராகரித்துள்ளது.