ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் Yoshihide Suga நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய தடுப்பூசி முயற்சிகள் விளையாட்டுகளை முன்னெடுத்து செல்ல உதவும் என்றார்.
உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டோக்கியோவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் டோக்கியோவில் நடைபெற உள்ளது.