அமெரிக்காவின் பல்வேறு ஊர்களிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்ற போராட்டம் கட்டுக்குள் வந்துள்ள போதிலும், டிரம்பின் ஆதரவாளர்கள் நாட்டின் பல ஊர்களிலும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மாநில தலைநகரங்களில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பைடனின் வெற்றியை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். கொரோனா பரவல் அதிகம் உள்ள போதிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியவில்லை.
ஒஹியோ, கலிபோர்னியா உள்ளிட்ட சில மாநிலங்களில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.