டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலோன் மஸ்க், சொத்து மதிப்பில் உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெப் பேசோசை நெருங்கி இரண்டாமிடத்துக்கு வந்துள்ளார்.
புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் 13 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
2017 அக்டோபரில் இருந்து தொடர்ந்து நாற்பது மாதங்களாக ஜெப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு 13 இலட்சத்து 23 ஆயிரத்து 940 கோடி ரூபாயாக உயர்ந்ததால் அவர் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
அவர் முதலிடத்தைப் பிடிப்பதற்குச் சொத்து மதிப்பு இன்னும் 21 ஆயிரத்து 60 கோடி ரூபாய் உயர்ந்தால் போதும். கடந்த ஓராண்டில் மட்டும் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 96ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றில் இதுவரை யாருக்கும் இல்லா வகையில் சொத்து மதிப்பு உயர்வாகும்.