சீனாவில் ராணுவ வீரர்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போருக்கு எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ள நிலையில், வடக்கு லியோனிங் மற்றும் தெற்கு சீனா பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய தொழில்நுட்பங்கள், கருவிகள் பயன்படுத்துவதை கணிசமாக அதிகரித்துள்ள சீன ராணுவம், அதற்கான பயிற்சியையும் வீரர்களுக்கு அளித்து வருகிறது. விமானப்படை, கடற்படை, காலாட்படை என முப்படைகளும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பயிற்சியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.