அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் Oahu தீவு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று இரவு நேரத்தில் வானில் பறந்து, இறுதியில் கடலில் விழுந்து மறைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நீல நிறத்தில் வானில் பறந்த அந்த மர்ம பொருளை பல்வேறு இடங்களில் கண்டதாக சமூகவலைத்தளங்களில் காட்சியை பதிவு செய்து மக்கள் வெளியிட்டுள்ளனர்.