எந்த வினாடியிலும் செயல்படுவதற்கு தயாராக இருக்குமாறு சீன ராணுவத்திற்கு, அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
சீன ராணுவ ஆணையத்திற்கு அவர் பிறப்பித்துள்ள முதல் உத்தரவில், போருக்கு முழு அளவில் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும், ராணுவ பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
ராணுவம் மற்றும் வீரர்களுக்கான பயிற்சியில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார். ராணுவத்தில் புதிய கருவிகள் மற்றும் படை வீரர்களை இணைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும் ஜின்பிங் வலியுறுத்தி இருக்கிறார்.