பிரேசில் நாட்டின் ரியோ கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் குப்பைகளால் சுற்றுச்சுழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
சாவோ கான்ராடோ கடற்கரை பகுதியில் ஒதுங்கிய பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் கேன்கள், பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகளை சமூக ஆர்வலர்கள் அகற்றினர்.
கடல்களை பாதுகாக்கும் ஓசியானா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் அமெரிக்கா நாடுகள் சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டுவதால், ரியோவில் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.