ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க இஸ்ரேல் அனுமதிக்காது என பிரதமர் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில், 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டலை துவக்கி விட்டதாக ஈரான் அறிவித்திருந்தது.
இதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல் பிரதமர், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் வெற்றி அடைய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.