ஈரான் 20 விழுக்காடு அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகள் அடங்கிய ஐநா பார்வையாளர் குழு ஈரானில் ஆய்வு நடத்தினர். அப்போது, நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஃபோர்டோ எரிபொருள் செறிவூட்டல் ஆலையில் யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனை அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார். இந்நிலையில் யுரேனியத்தை செறிவூட்டும் முடிவு தங்களுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் விலகுவதற்கு சமம் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.