அலிபாபா நிறுவனத்தின் தலைவரும், சீன கோடீஸ்வரர்களில் முக்கியமானவருமான ஜாக் மாவை கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது.
அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவர் காணாமல் போயிருப்பது பல யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக வெளிப்படையாக பேசக்கூடிய ஜாக் மா, சீனாவின் அடகுகடை பாணியிலான பொருளாதார கட்டுப்பாடுகளை விமர்சித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஷாங்காயில் கடந்த நவம்பர் மாதம் இது குறித்து பேசிய அவர், சீன பொருளாதாரம்,புதிய வர்த்தக கண்டுபிடிப்புகளை ஜீரணிக்க முடியாமல் திணறுவதாக கூறியதுடன் அரசு வங்கிகளையும் விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து அதிபர் ஷி ஜின்பிங்கின் நேரடி உத்தரவின் படி சீன அதிகாரிகள் ஜாக் மாவை கண்டித்தனர்.
அவரது Ant குழுமத்தின் சுமார் 2,73,000 கோடி பங்கு வெளியீட்டையும் அவர்கள் தடுத்து விட்டனர். இந்த நிலையில் ஜேக் மா மாயமாகிவிட்டதாகவும் அவர் எங்கு உள்ளார் என்பதிலும் மர்மம் நீடிக்கிறது.