பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, அங்கு மருத்துவமனைகளில் தடுப்பூசியின் முதல் டோஸை விநியோகிக்கும் பணி தொடங்கியது.
லண்டனில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பைசர் நிறுவன தடுப்பூசி மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த இந்த கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ், பிரின்சஸ் ராயல் மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட்டது.
ஜனவரி 3-வது வாரத்தில் இருந்து வாரந்தோறும் 2 மில்லியன் டோஸ்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.