தென் கொரிய தலைநகர் சியோலில், மீன் அருங்காட்சியகத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளை, பாரம்பரிய உடையணிந்த நீச்சல் வீரர்கள் தண்ணீருக்குள் இருந்தபடி வரவேற்றனர்.
தென் கொரியாவின் மிகப்பெரிய மீன் அருங்காட்சியகமான Lotte World Aquarium-இல், சிறிய மீன்கள் முதல் சுறா மீன்கள் வரை, 650 வகை கடல் வாழ் உயிரிணங்கள் வளர்க்கப்படுகின்றன.
2,200 டன் எடையிலான இந்த அருங்காட்சியகத்தில், மீன்களுக்கு மத்தியில் பாரம்பரியமிக்க Hanbok உடையில் வலம் வந்த நீச்சல் வீரர்களை சிறுவர்கள் உற்சாகத்துடன் ரசித்தனர்.