அமெரிக்காவில் பஹாமஸ் தீவில் இருந்து புளோரிடா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒர்த் ஏரிப் பகுதியில் சென்ற போது திடீரென படகு மாயமானது. இதனால் அந்தப் படகில் சென்ற 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மாயமானவர்களை தேடி அமெரிக்க கடலோரக் காவல் படையினர் விரைந்துள்ளனர்.
44 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.