கரீபியன் தீவுப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்துச் சிதற வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர்.
செயின்ட் வின்சென்ட் தீவு மற்றும் கிரெனடைன்ஸ் தீவுகளில் உள்ள எரிமலை சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றி வருவதால் எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே தீவுப் பகுதிகளில் தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வின்சென்ட் தீவில் வசிப்பவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.