பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டு தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவை இளமையான, சுதந்திரமான என்று குறிப்பிடும் வாசகங்கள் தேசிய கீதத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட கால வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கான்பெர்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்காட் மொரிசன் கூறினார்.
ஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.