காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சுக்மீத் சிங் பிக்ரேவால் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் டெல்லி விமான நிலையத்தில் காவல்துறையின் சிறப்புப் படையினர் அவனை கைது செய்தனர்.
பல்வேறு பயங்கரவாத குற்றங்களுக்காக தேடப்பட்ட நபரை கைது செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவனாக விளங்கினான்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவில் எதிரிகளைக் கொலை செய்ய சுக்மீத் சிங்கை பயன்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துபாயில் கைது செய்யப்பட்ட சுக்மீத் சிங்கை இந்தியாவின் கோரிக்கையை அடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது துபாய் அரசு.