வலது காலில் ஏற்பட்ட வலி காரணமாக வாடிகன் நகரில் இன்று நடைபெற உள்ள புத்தாண்டு பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு போப்பாக பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டு 84 மாதங்களாக அப்பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய பதவி காலத்தில் தற்போது தான் முதன்முறையாக புத்தாண்டு பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போப்பிற்கு பதிலாக இந்நிகழ்ச்சியில் கார்டினல்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். முன்னதாக புத்தாண்டு பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்வார் என வாடிகன் அறிவித்திருந்தது.