உலகின் பல்வேறு நாடுகளில் 2021 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
புவியியல் அமைப்பின் படி பசுபிக் தீவுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபாதியில் புத்தாண்டு முதலில் பிறந்தது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. வண்ண விளக்குகள், வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை ஆக்லாந்து நகர மக்கள் மகிழ்வுடன் வரவேற்றனர்.
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கம் போல் இம்முறையும் பிரமிக்க வைத்தது. சிட்னியில் ஹார்பர் பாலம் மற்றும் ஒப்ரா ஹவுசில் நடைபெற்ற வாணவேடிக்கைகள் கண்களுக்கு விருந்து படைத்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.
வடகொரியாவிலும் புத்தாண்டை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தைவான் நாட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டம் அமர்க்களமாக இருந்தது. தைபே நகரில் ஹால் பிளாசா கட்டித்தில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள் வானில் வர்ண ஜாலம் நிகழ்த்தின. புத்தாண்டை ஒட்டி சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.