கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஏற்கனவே 2.4 கோடி மக்கள் வசிக்கும் ஊர்களில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். லண்டன் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு முழுவதும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், வடக்கு யார்க்சயர் மற்றும் லிவர்பூலில் 3 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
4 அடுக்கு ஊரடங்கு மிட்லாண்ட்ஸ், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.