சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திடம் இருந்து 12 லட்சம் முறை செலுத்தும் அளவு கொரோனா தடுப்பு மருந்துகளைப் பாகிஸ்தான் கொள்முதல் செய்ய உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து வாங்க ஆயிரத்து 95 கோடி ரூபாய் நிதி வழங்க இம்மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்தது. கொரோனா தொற்றுக்கு இலக்காகும் சூழலில் உள்ள முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட 5 விழுக்காடு மக்களுக்கு முதலில் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
12 லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திடம் இருந்து பாகிஸ்தான் அரசு கொள்முதல் செய்ய உள்ளது. 2021ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் உசைன் தெரிவித்துள்ளார்.