பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் கரக் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றை 100க்கும் மேற்பட்ட மத அடிப்படைவாதிகள் தீ வைத்து எரித்தனர்.
உள்ளூர் முஸ்லீம் அமைப்பினர் திரண்டு வந்து கோவிலுக்கு தீ வைத்த போது காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்யாமல் ஓடி ஒளிந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில் அக்கோவில் முழுவதும் தீயில் கருகி சாம்பலானது. பாகிஸ்தானில் சிறுபான்மை இந்து மக்களுக்கு எதிரான மத ரீதியான தாக்குதல்களும் வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் அதிகமாகி உள்ளதாக சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் சூழலில் இச்சம்பவம் உலகின் பல்வேறு தரப்பு கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.