சீனாவிலிருந்து படகில் தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டு நாள் காவலில் இருந்த 10 ஹாங் காங் ஆர்வலர்களுக்கு சீன நீதிமன்றம் சென்ஸேன் தண்டனை விதித்துள்ளது. 18 வயதிற்கு கீழ் இருந்த இரண்டுபேரை ஹாங் காங் போலீஸிடம் சீனா ஒப்பளித்தது.
படகு சவாரியை ஏற்பாடுசெய்த இரண்டு பேருக்கு தலா இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் மீதம் இருந்தவர்களுக்கு 7 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி $1500 முதல் $3000 வரை அபராதம் வழங்க கோரியும் அந்த நீதிமன்றம் உத்தரவு அளித்தது.
கடந்த ஆண்டு நடந்த ஹாங் காங் போராட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த ஆர்வலர்கள், தைவானிற்கு தப்பி செல்லும்போது சீன கடலோர காவல்படையினரிடம் ஆகஸ்ட் மாதம் பிடிபட்டனர். அவர்களை விடுவிக்க கோரி அமெரிக்கா உட்ப்பட பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
ஆர்வலர்கள், காவலில் இருந்தபோது தங்கள் குடும்பத்துடனும் வழக்கறிஞருட --னும் பேச அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சீன போலீஸ் அதிகாரிகள் மீது வைக்கப்பட்டது. இதனை திட்டவட்டமாக மறுத்த சீன போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.ஆர்வலர்கள் அனைவர்க்கும் அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் சட்ட ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.
2019 இல் சீனாவிற்கு எதிராக ஹாங் காங்கில் போராட்டங்கள் வெடித்தன. ஹாங் கங்கில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களை சீனா, மக்காவு மற்றும் தைவானிற்கு நாடு கடத்தி விசாரிக்க வழிவகை செய்யும் "கைதிகள் பரிமாற்ற சட்டத்தை" எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டங்கள் தீவிரம் அடைந்ததால் பின்னர் இந்த சட்டம் திரும்ப பெற பட்டது.
1997 முதல் ஹாங் காங் "ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" என்ற கொள்கையின் அடிப்படையில் தன்னாட்சி பெற்று சீன அரசின் நிர்வாகத்தில் இயங்கி வரும் ஒரு பகுதியாகும். அதன் அடிப்படையில் , ஹாங் காங் சொந்த சட்டங்களை கொண்டு இயங்கி வருகிறது. ஆகையால் "கைதிகள் பரிமாற்ற சட்டம் ", ஒரு நாடு, இரண்டு அமைப்புகள் கொள்கைக்கு எதிரானது என்று போராட்டக்கார்கள் அதனை திரும்ப பெறக்கோரி நிபந்தனைகள் வைத்தனர்.
பின்னர் இந்த ஆண்டு இயற்றப்பட்ட " ஹாங் காங் தேசிய பாதுகாப்பு சட்டம்" புதிய போராட்டங்களுக்கு வழிவகை செய்தது.
.
.
.