பெல்ஜியம் நாட்டில் கொரோனா தடுப்பூசி முதல்நபராக 96 வயது முதியவர் ஒருவருக்கு போடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பைசர் தடுப்பூசி மருந்து போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் ஜோஸ் ஹெர்மன்ஸ் என்ற 96 வயது முதியவருக்கு முதல்நபராக பைசர் தடுப்பூசி போடப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதியவர், மருந்து செலுத்தப்பட்டபிறகு 30 வயது நபர் போல உணர்வதாக குறிப்பிட்டார்.