அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்கவும், அரசு நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்டத் தேவையான நிதியை வழங்கவும் 169 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.
இதனால், நிதியின்றி மூடப்படும் நிலையில் இருந்த அரசுத் துறை நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்ட 103 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும்.
கொரோனா சூழலில் வேலையின்மையால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுமக்களுக்கும் இழப்பீடும், நிதியுதவியும் வழங்க 66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் எனக் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தது குறிப்பிடத் தக்கது.