உலகின் மிகப் பெரிய பனிப்பாளத்தை இங்கிலாந்து விமானப்படை அருகில் சென்று படம் பிடித்துள்ளது.
அண்டார்க்டிக்காவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு உடைந்த ஏ68 ஏ என்ற பனிப்பாளம் உலகில் மிகப் பெரியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பனிப்பாளம் கடலில் மிதந்து வருகிறது.
தற்போது தெற்கு ஜார்ஜியா தீவில் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நிலையில் பனிப்பாளத்தில் ஆங்காங்கே வெடிப்புகளும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால் இவை மேலும் தனித்தனியாக உடைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உலகின் மிகப் பெரிய பனிப்பாளத்தை இங்கிலாந்து விமானப்படை அருகில் சென்று படம் பிடித்துள்ளது.