ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
ஃபோம்பன் என்ற இடத்தில் இருந்து தலைநகர் யவுண்டேக்கு பேருந்து ஒன்று 70 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று பேருந்தின் மீது மோதியதில் 18 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் விபத்து நடந்திருப்பதால், பேருந்து அல்லது லாரியின் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.