ஐரோப்பிய நாடான போஸ்னியாவில், ஆயிரக்கணக்கான அகதிகள் தங்க இடமின்றி கடும் குளிரில் தவித்து வருகின்றனர்.
வடமேற்கில் உள்ள முகாமில் கடந்த 23ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் அவை எரிந்து நாசமாகின. பிஹாக் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த முகாம் கோடை மற்றும் குளிர்காலங்களுக்காகத் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு 60 மில்லியன் யூரோக்களை போஸ்னியாவிற்கு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம், மேலும் 25 மில்லியன் யூரோக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.