சீனாவில் மர்ம நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
லியோனிங் மாகாணத்தில் கையுவான் என்ற இடத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாகக் குத்தினார்.
இதனால் பதற்றமடைந்து ஓடியவர்களையும் அந்த நபர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் இணைந்து அந்த நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.