ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் தாழ்வாகப்பறக்கும் விமானங்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை ரஷ்யா தயாரித்து பரிசோதித்துள்ளது.
காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஏவுகணைக்கு, ஹைடெக் 9 எம் 333 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏவப்பட்ட பின், தானாக இலக்கைத் தேர்ந்தெடுத்து தாக்கும் வல்லமை கொண்டது.
ரேடார் கண்களில் சிக்காமல் தாழ்வாகப் பறக்கும் விமானங்களையும் தாக்கும் வல்லமை கொண்ட ஹைடெக் 9 எம் 333 ஏவுகணை ரஷ்யாவின் ஓரன்பர்க் என்ற இடத்தில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.