அமெரிக்காவில் மாடெர்னா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட டாக்டர் ஒருவருக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பைசர் தடுப்பூசியை தொடர்ந்து, மாடெர்னா தடுப்பூசிக்கும் அமெரிக்காவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பாஸ்டன் மருத்துவ மையத்தில் பணிபுரியும், கடல் உணவு ஒவ்வாமை உள்ள டாக்டர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன், தலைசுற்றல், இதயத்துடிப்பு அதிகரிப்பு என தீவிர ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பைசர் தடுப்பூசி போடப்பட்ட 5 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்ட குறித்து அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.