சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசி, முதல் கட்டமாக நல்ல விளைவை தந்துள்ளதால், மேலும் 30 லட்சம் டோஸ்களை ஓரிரு நாட்களில் வரவழைத்து துருக்கி அரசு பயன்படுத்த உள்ளது.
சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசியை, தாங்களாக முன்வந்த 7 ஆயிரத்து 371 பேருக்கு, துருக்கி அரசு செலுத்தியது.
இதில் தடுப்பூசியானது 91.25 சதவீதம் பயனளிக்கும் வகையில் இருந்ததால், மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையாத நிலையிலும், மேலும் 30 லட்சம் டோஸ்களை துருக்கி அரசுதருவிக்க உள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் அவை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என துருக்கி சுகாதார அமைச்சர் Fahrettin Koca தெரிவித்துள்ளார்.
சுமார் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் வகையில், நாள்தோறும் ஒன்றரை லட்சம் அல்லது இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என துருக்கி சுகாதார அமைச்சர் Fahrettin Koca கூறியுள்ளார்.