பிரான்ஸ் தலைநர் பாரிஸில் உள்ள 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நோட்ரா டாம் தேவாலயத்தில் தீ விபத்து நடந்த ஒன்றரை வருடத்திற்கு பின்பு இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
மாத தொடக்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு அங்குள்ள தனியார் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான இந்த தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
5 வருடங்களுக்குள் தேவாலயம் சீரமைக்கப்படும் என அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.