பிரிட்டனில் ஆறு லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு பைசர் - பயான்டெக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பைசர் - ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தைப் பொதுமக்களுக்குச் செலுத்தும் பணி பிரிட்டனில் டிசம்பர் எட்டாம் நாள் தொடங்கியது. உலகிலேயே முதன்முறையாகப் பெருமளவில் பைசர் பயான்டெக் தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கியது பிரிட்டனில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
டிசம்பர் 20 வரை 6 லட்சத்து 17 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 4 கோடி முறை செலுத்தும் அளவிலான கொரோனா தடுப்பு மருந்தை பைசர் நிறுவனத்திடம் பிரிட்டன் ஆர்டர் செய்துள்ளது.