பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் சாண்டா கிளாஸ் ஆடை அணிந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறார்.
லியாண்ட்ரோ டா சில்வா என்ற அந்த மாற்றுத்திறனாளி நகரும் பலகையில் அமர்ந்தவாறு சிக்னல்களில் காத்திருப்பவர்களிடம் இருந்து நிதி திரட்டுகிறார்.
கொரோனா காலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு தன்னால் நிதிதிரட்ட முடியவில்லை என கூறியுள்ள அவர், சாண்டா கிளாஸ் ஆடை நிதிதிரட்ட மிகவும் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.