இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனைக்கு பின்னர் சரக்கு லாரிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், ஆயிரக்கணகான வானங்கள் எல்லையில் அணிவகுத்து நிற்கின்றன.