அமெரிக்காவுக்கு 100 மில்லியன் டோஸ் அளவிற்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க ஃபைஸர் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதற்காக அந்த நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே 2 பில்லியன் டாலர் அளவிற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் மருந்தில் 70 மில்லியன் டோஸ்கள் ஜூன் 30ம் தேதிக்குள்ளும், மீதமுள்ளவை ஜூலை 31ம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மேலும் 400 மில்லியன் டோஸ்கள் கூடுதலாகத் தயாரிக்கவும் ஃபைஸர் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 4 பில்லியன் டாலர் வழங்கவும் அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.