பிரேசிலின் சா பாலோ (SAO PAULO) மாகாணத்திலுள்ள மருந்து ஆலையில், சீன கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
சினோவாக் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துக்கு, கொரோனா வாக் (CoronaVac) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அந்த மருந்துக்கு பிரேசில் அரசு ஒப்புதல் அளிக்காதபோதும், சாபாலோ மாகாண ஆளுநரும், 2022 அதிபர் தேர்தலில் அதிபர் போல்சனாரோவை எதிர்த்து போட்டியிடயிருக்கும் ஜாவோ டோரியா ஆதரவு தெரிவித்து வருகிறார்.
தனது மாகாணத்தில் 25ம் தேதி முதல் மக்களுக்கு மருந்து போடப்படும் எனவும் கூறியுள்ளனர்