கிறிஸ்துமஸை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள சிறப்பு அலங்காரத்தால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் அருகே உள்ள உயிரியல் பூங்கா வண்ணமயமாக ஜொலிக்கிறது.
அந்த உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் கோலா கரடிக்கு படுத்து தூங்க ஜிகினா, பஞ்சு ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்ட மெத்தை ஏற்படுத்தி தரப்பட்டிருந்தது.
மேலும் அந்த கரடி விளையாட கிறிஸ்துமஸ் தாத்தா அணியும் தொப்பி அணிந்த கோலா கரடி பொம்மையும் வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல் கீரி உள்ளிட்டவற்றின் குட்டிகள் பராமரிக்கப்பட்ட இடத்திலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உணவுகளும் வழங்கப்பட்டன.