நேபாள பிரதமர் சர்மா ஒலி அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி மேலிடம் தெரிவித்தது. இந்நிலையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது.
அதில் நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் கே.பி. சர்மா ஓலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு பதிலாக, மூத்த தலைவர் மாதவ் குமார் நேபாளை கட்சியின் இரண்டாவது தலைவராக மத்தியக் குழு ஒருமனதாக நியமித்துள்ளதாகவும், காத்மாண்டு போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று நடக்கும் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் புஷ்ப குமார் பிரசண்டா, நாடாளுமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.