அமெரிக்க பொருளாதாரக் கவுன்சில் துணை இயக்குநராக அமெரிக்கத் தமிழரான பரத் ராமமூர்த்தியை, அதிபராக தேர்வாகியுள்ள பைடன் தெரிவு செய்துள்ளார்.
அந்நாட்டின் தேசிய பொருளாதாரக் கவுன்சில் என்பது உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார கொள்கை வகுத்தலுக்கான ஆலோசனை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் துணை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள பரத் ராமமூர்த்தி, தற்போது ரூஸ்வெல்ட் இன்ஸ்டிடியூட்டில் கார்ப்பரேட் பவர் திட்டத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள ராமமூர்த்தி, பிடென்-ஹாரிஸ் நிர்வாகத்தில் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக இணைந்ததில் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.