பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 27 நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் உள்பட பல நாடுகளிடம் பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.
இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் தடுப்பூசிக்கு அனுமதியளித்ததையடுத்து பைசர் நிறுவன தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதே போல 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியனும், பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி அளித்துள்ளது.