கிறிஸ்துமஸை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது. சிட்னியின் தாரோங்கோ உயிரியல் பூங்காவில் ஒட்டக சிவிங்கிகள், கடல் சிங்கங்கள், ராட்சத எலிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன.
இதில் ஒட்டக சிவிங்கிகளுக்கு ஆப்பிள் உணவாக அளிக்கப்பட்டது. கடல் சிங்கங்களுக்கு ஐஸ் குவியல்களில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று மீன்கள் வரிசையாக வைத்து அளிக்கப்பட்டது. இதேபோல் ஸ்குரில் மங்கீஸ் எனப்படும் அணில் குரங்குகள் கேபிபாராஸ் எனப்படும் ராட்சத எலிகள் உள்ளிட்டவற்றுக்கும் சிறப்பு உணவு அளிக்கப்பட்டது.