பிரிட்டனில் கொரோனா வைரசின் புதிய வகை பரவி வரும் நிலையில், அதை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் பேசிய அமெரிக்கத் தடுப்பூசித் திட்டத்தின் தலைமை ஆலோசகர் மான்செப் ஸ்லாவ், பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரசின் புதிய வகை அமெரிக்காவில் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்தார்.
புது வகை வைரஸ் தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் எச்சரிக்கை விடுக்க இப்போது எந்தக் காரணமும் இல்லை என்றும், பிரிட்டனில் இருந்து வரும் விமானப் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டிய தேவை இதுவரை எழவில்லை என்றும் கொரோனா சோதனையை மேற்பார்வை செய்யும் அதிகாரியான கிராயிர் தெரிவித்துள்ளார்.