பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ள பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில், ஈராக் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராக் தலைநகரான பாக்தாதில் கிரீன் ஸோன் எனப்படும் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் முக்கிய அரசு அலுவலகங்களும், பன்னாட்டு தூதரகங்களும் உள்ளன.
அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு கட்டுயூஷா ரக ராக்கெட்டுகள் நேற்று வீசப்பட்டன. அதில் தூதரகத்தின் சுற்றுச்சுவர் மட்டும் லேசாக சேதமடைந்தது.
ஒரு ராக்கெட்டை அங்குள்ள ராக்கெட் தடுப்பு தளவாடம் திசை திருப்பியது. ஈரானின் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.