கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கை பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறப்பித்துள்ளார்.
பொதுவெளியில் ஒன்றுகூடி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மேற்கொள்ள தடை விதித்துள்ள அவர், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மிகவும் கட்டுப்பாட்டான 4 அடுக்கு ஊரடங்கு பகுதிகளை அறிவித்துள்ள அவர், இந்த பகுதிக்கு வெளியே வசிக்கும் குடும்பங்கள் மட்டுமே கிறிஸ்துமசை சேர்ந்து கொண்டாட அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியம் அல்லாத சில்லறை வர்த்தக கடைகள், பொழுதுபோக்கு மையங்கள், முடிதிருத்த நிலையங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.