அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அந்நாட்டு அரசுக்காக புதிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பால்கன்-9 எனும் மீண்டும் பயன்படுத்தகூடிய ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை செலுத்தியது.
புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட், செயற்கைக்கோளை வானில் செலுத்தியதுடன் மீண்டும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
பாதுகாப்பு காரணத்துக்காக செயற்கைக்கோள் நிலை குறித்த தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் செயற்கைக்கோள் செலுத்துதல் தொடர்பான காட்சியை ஒளிபரப்பியது.