ஆர்மீனியாவில் பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆயிரத்துக்கும் அதிகமானோர் பேரணியாகச் சென்றனர்.
அஸர்பைஜானுடன் நடந்த போரில் உயிரிழந்தவர்களின் கல்லறைக்கு ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் அஞ்சலி செலுத்தச் சென்றார்.
அந்நிகழ்வு முடிந்து வெளியே வந்த அவரை பதவி விலகக்கோரி ஏராளமானோர் பேரணியாகச் சென்றனர்.
தலைநகர் எரேவானில் ஊர்வலமாகச் சென்றவர்கள், போரினை பிரதமர் பாஷினியன் தவறாகக் கையாண்டதாகவும், அதனால் தோல்வி ஏற்பட்டதாகவும் கூறி, அவருக்கு எதிராக முழக்கமிட்டபடிச் சென்றனர்.