சீனா, தனது கிழக்கு கடற்பரப்பில், வான்படை தாக்குதல் எதிர்ப்புக்கான பகுதியில், பெரிய அளவிலான போர் ஒத்திகைகளை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவின் 2 குண்டு வீச்சு விமானங்கள் அந்த பகுதியில் அத்துமீறி பறந்தன.
Aircraft Spots என்ற விமானங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் அமைப்பு இதைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிகார மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் புதிய அதிபராக உள்ள ஜோ பைடனுக்கு அதிபர் டிரம்ப் முட்டுக்கட்டை போட்டுவருகிறார். இந்த நிலையிலும், அமெரிக்க வான்படை, கிழக்கு ஆசியாவில் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் 2 F B-1B குண்டு வீச்சு விமானங்கள் சீன கடற்பகுதியில் பறந்துள்ளன. இது போன்ற கனரக விமானங்கள் உளவுப் பணிக்கு அனுப்பப்படுவது வழக்கமில்லை. ஆனால் சீனாவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் இந்த விமானங்கள் அங்கு பறந்து சென்றதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.