தென் ஆப்பிரிக்காவில் 100க்கும் அதிகமான காட்டெருமைகளுக்கு நடுவில் சிக்கிய சிங்கம் சின்னாபின்னமாகி உயிரை விட்டது.
குரூகர் தேசியப் பூங்காவில் சில சுற்றுலாப் பயணிகள் காட்டெருமைகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் குடிக்க வந்த எருமைகளுக்கு நடுவே திடீர் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கு பார்த்த போது கூட்டத்திற்கு நடுவே சிக்கிய பெண் சிங்கம் ஒன்றை காட்டெருமைகள் தூக்கி வீசி பந்தாடிக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு எருமையும் பொறுமையாக முட்டித் தள்ள, இறுதியில் குளக்கரையில் குற்றுயிரும் குலை உயிருமாக வந்து விழுந்தது அந்தச் சிங்கம். இறுதியில் இரையாக்க வந்த இடத்தில் பலியாகிப் போனது அந்தச் சிங்கம்.